• Wed. Jan 15th, 2025

24×7 Live News

Apdin News

இஸ்ரேல்- ஹமாஸ்: இறுதி கட்டத்தில் காஸா போர் நிறுத்த பேச்சுவார்த்தை – போர் முடிவுக்கு வருமா?

Byadmin

Jan 14, 2025


இஸ்ரேல் காஸா போர் நிறுத்தம்

பட மூலாதாரம், Getty Images

காஸாவில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்ய மத்தியஸ்தம் செய்பவர்கள் கத்தாரில் மீண்டும் கூடியுள்ளனர். இஸ்ரேலும் ஹமாஸும் இது குறித்த ஒரு ஒப்பந்தத்தின் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளன.

இந்த பேச்சுவார்த்தைகளைப் பற்றி நன்கு அறிந்த பாலத்தீன அதிகாரி ஒருவர், இஸ்ரேல் – பாலத்தீன போரில் முதல் முறையாக, இஸ்ரேல் மற்றும் ஹமாஸின் பிரதிநிதிகள் ஒரே கட்டடத்தில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக பிபிசியிடம் கூறினார்.

இஸ்ரேல் படைகள் அந்த பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நிபந்தனையை ஹமாஸ் கைவிட்டதாகவும் கூறப்படுகிறது.

தோஹாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய கத்தார் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மஜீத் அல்-அன்சாரி, பேச்சுவார்த்தைகள் “இறுதி கட்டத்தில்” இருக்கிறது என்றும், ஒப்பந்தம் ஏற்படுவதைத் தடுத்த முக்கிய பிரச்சினைகள் “தீர்க்கப்பட்டுள்ளன” என்றும் கூறினார்.

By admin