• Tue. Oct 22nd, 2024

24×7 Live News

Apdin News

இஸ்ரேல்: ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட வீடு யாருடையது? பிபிசிக்கு கிடைத்த புதிய தகவல்

Byadmin

Oct 21, 2024


ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த 2021-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட சின்வாரின் புகைப்படம்.

  • எழுதியவர், அலி அப்பாஸ் அஹ்மாடி & மார்வா கமால்
  • பதவி, பிபிசி நியூஸ், பிபிசி அரபு சேவை

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட வீடு, 15 ஆண்டு காலமாகத் தன்னுடைய வீடாக இருந்ததாக, காஸாவை சேர்ந்த ஒரு பாலத்தீன நபர் தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் அவர் அங்கிருந்து இடம்பெயர்ந்தார்.

சின்வார் கொல்லப்பட்டது குறித்து இஸ்ரேல் வெளியிட்ட ட்ரோன் காட்சியில் பகுதியளவு அழிக்கப்பட்ட கட்டடத்தைப் பார்த்து, அது தெற்கு காஸாவின் ரஃபா நகரில் ஐபின் செனா தெருவில் உள்ள தனது வீடு என, ‘அதிர்ச்சியடைந்ததாகக்’ கூறுகிறார் அஷ்ரஃப் அபோ தாஹா.

2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7–ஆம் தேதி, இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய பங்கு வகித்தவராக கருதப்படும் யாஹ்யா சின்வார் இஸ்ரேலிய படையினரால் கடந்த புதன்கிழமை கொல்லப்பட்டார்.

அவர் கொல்லப்படுவதற்கு முன்பு பகுதியளவு சேதமடைந்த கட்டடத்தில் சின்வார் இருக்கும் ட்ரோன் காட்சியை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டிருந்தது.

By admin