• Wed. Jun 18th, 2025

24×7 Live News

Apdin News

இஸ்ரேல் Vs இரான்: சிறிய, அதிநவீன ராணுவம் கொண்ட இஸ்ரேல், மிகப்பெரிய நாடான இரானுடன் மோதுவது எப்படி?

Byadmin

Jun 17, 2025


இரான், இஸ்ரேல், அமெரிக்கா, மத்திய கிழக்கு, காஸா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இஸ்ரேலிடம் F-35 போன்ற அமெரிக்கத் தயாரிப்பு ஜெட் விமானங்கள் உள்ளன, ஆனால் இரானில் அதன் இலக்குகளை அடைய அவை போதுமானதா?

இரானுடனான இஸ்ரேலின் மோதலை பார்க்கும்போது, அது பொருந்தாத ஒன்றாக தோன்றலாம், அதாவது 90 லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட ஒரு நாடு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் 8.8 கோடி மக்கள்தொகையைக் கொண்ட ஒரு பெரிய நாட்டுடன் மோதுகிறது.

ஆனால், இஸ்ரேலின் வலிமையான மற்றும் அதிநவீன, அமெரிக்காவால் மட்டுமே வழங்கப்படும் பெரிய ஆயுதக்கிடங்குடன் கூடிய ராணுவப் படைகள் காரணமாக, அந்நாட்டால் தன்னைவிட பெரிய எதிரியை விட மேலோங்கி இருக்க முடிகிறது.

மத்திய கிழக்கில் தற்போது நடைபெற்று வரும் போரில் இருநாடுகளுக்கிடையேயான ஒப்பீடுகள் குறித்து பிபிசி இங்கே ஆராய்கிறது.

இரான் இதுவரை சாதித்தது என்ன?

இரான், இஸ்ரேல், அமெரிக்கா, மத்திய கிழக்கு, காஸா

பட மூலாதாரம், Getty Images

டெஹ்ரானின் வான்வெளியை தன் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துவிட்டதாக, இஸ்ரேல் ஏற்கெனவே தெரிவித்துள்ளது. இரானின் சில பழைய போர் விமானங்கள் புறப்பட்டதற்கான அறிகுறிகளே இல்லை எனும் நிலையில், இஸ்ரேலின் கூற்று முற்றிலும் முரணானதாக உள்ளது.

By admin