• Sat. Jun 14th, 2025

24×7 Live News

Apdin News

இஸ்ரேல் vs இரான் ராணுவ பலம் குறித்த ஓர் ஒப்பீடு – யாருடைய ராணுவம் பலம் மிக்கது?

Byadmin

Jun 13, 2025


இஸ்ரேல் vs இரான் ராணுவ பலம் - ஓர் ஒப்பீடு

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், ஆரிஃப் ஷமீம்
  • பதவி, பிபிசி உருது மற்றும் பிபிசி பெர்ஷிய மொழிச் சேவை

இரானின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் முக்கிய தலைவர்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில், இரானிய அணு விஞ்ஞானிகள் 2 பேரும், இரானிய புரட்சிகர காவல் படைத் தலைவரும் கொல்லப்பட்டதாக இரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் இரான் எச்சரித்துள்ளது.

இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு பெரிய மோதல் பற்றிய அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் இரான், இரண்டு நாடுகளில், எந்த நாட்டின் ராணுவம் பலம் மிக்கது என்ற கேள்வி எழுகிறது.

இஸ்ரேல் vs இரான் ராணுவ பலம் - ஓர் ஒப்பீடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரானின் முக்கிய ராணுவ பலம், அதன் ஏவுகணைகள்

இஸ்ரேல், இரான் – யார் கை ஓங்கியிருக்கிறது?

பிபிசி இந்த கேள்வியைக் கீழே பட்டியலிடப்பட்டுள்ள ஆதாரங்களைப் பயன்படுத்தி எடைபோட்டது. இரு நாடுகளுக்கும் குறிப்பிடத்தக்க திறன்கள் உள்ளன, அவை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

சர்வதேச மூலோபாய ஆய்வுகள் நிறுவனம் (International Institute for Strategic Studies – IISS) இரு நாட்டு ராணுவத்தின் தாக்கும் திறனை ஒப்பிட்டு, பல்வேறு அதிகாரப்பூர்வ மற்றும் இணையத்தில் கிடைக்கும் முறைகளைப் பயன்படுத்தி சிறந்த மதிப்பீடுகளை உருவாக்குகிறது.

By admin