• Wed. Feb 12th, 2025

24×7 Live News

Apdin News

இஸ்ரேஸ் vs ஹமாஸ்: பணயக்கைதிகள் விடுவிப்பு தொடர்பாக இஸ்ரேல் எச்சரிக்கை- அரபு நாடுகளின் முயற்சி என்ன

Byadmin

Feb 12, 2025


இஸ்ரேல், ஹமாஸ், பாலத்தீனம், காஸா, அமெரிக்கா

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, காஸாவுக்கு உள்ளேயும் அதைச் சுற்றியும் ராணுவத்தைக் குவிக்குமாறு இஸ்ரேலிய படைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்

“பாலத்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ், வரும் சனிக்கிழமைக்குள் (பிப்ரவரி 15) பணயக்கைதிகளை எங்களிடம் ஒப்படைக்கவில்லை என்றால், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவோம்” என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, காஸாவில் மீண்டும் போர் தொடங்கக்கூடும் என்ற கவலை அதிகரித்து வருகிறது.

மூன்று வாரங்களுக்கு முன் கொண்டுவரப்பட்ட, போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை இஸ்ரேல் மீறியதாக ஹமாஸ் ஆயுதக்குழு குற்றம்சாட்டியது. ‘மறு அறிவிப்பு வரும் வரை’ இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிப்பதை நிறுத்திவைக்கப்போவதாகவும் ஹமாஸ் அறிவித்திருந்தது.

இதையடுத்து பெஞ்சமின் நெதன்யாகுவின் பாதுகாப்பு அமைச்சரவை செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) அன்று கூடியது.

By admin