• Wed. Sep 9th, 2026

24×7 Live News

Apdin News

இஸ்ரோவின் ராக்கெட் தொழில்நுட்பங்களை தனியாரிடம் கொடுக்க திட்டமா? 9 தொழிற்சங்கங்களின் கடிதம் எழுப்பும் கேள்வி

Byadmin

Sep 9, 2026


இஸ்ரோ ராக்கெட் தொழில்நுட்பங்களை தனியாரிடம் கொடுக்க திட்டமா? 9 தொழிற்சங்கங்களின் கடிதம் எழுப்பும் கேள்வி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

    • எழுதியவர், அமரேந்திர யர்லகடா
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தனியார்மயமாகிறதா என்ற விவாதம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இதுதொடர்பாக தெளிவுபடுத்தக் கோரி, அந்நிறுவனத்தைச் சேர்ந்த 9 தொழிலாளர் சங்கங்கள் இஸ்ரோ தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளது விவாதத்திற்கு வித்திட்டுள்ளது.

எனினும், இது “அடிப்படை ஆதாரமற்றது” என்று இஸ்ரோ தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது.

இது குறித்து இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தின் (இன்-ஸ்பேஸ்) தலைவர் பவன் குமார் கோயங்கா தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ளார்.

”இந்திய விண்வெளித் துறைக்கு இஸ்ரோவே முதுகெலும்பாகத் திகழும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

By admin