• Thu. Nov 7th, 2024

24×7 Live News

Apdin News

இஸ்ரோ நிலா, செவ்வாய் ஆய்வுக்கு நாசாவை விட மிகக் குறைந்த செலவில் விண்கலனை அனுப்புவது எப்படி?

Byadmin

Nov 7, 2024


இந்தியா - விண்வெளி ஆராய்ச்சி - இஸ்ரோ - சந்திரயான் - மங்கள்யான்

பட மூலாதாரம், ISRO

படக்குறிப்பு, சமீபத்தில் இந்தியா 227 பில்லியன் ரூபாய் செலவில் பல்வேறு விண்வெளி திட்டங்களை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்திருந்தது.

சமீபத்தில் இந்தியா 227 பில்லியன் ரூபாய் செலவில் பல்வேறு விண்வெளி திட்டங்களை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்திருந்தது.

நிலவுப் பயணத்தை தொடர்ந்து இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிக்க விண்வெளி ஆராய்ச்சியின் அடுத்த கட்டமாக, வெள்ளி (venus) கிரகத்திற்கு ஒரு விண்கலத்தை அனுப்புதல், நாட்டின் முதல் விண்வெளி நிலையத்திற்கான முதல்கட்ட பணிகளை தொடங்குதல் மற்றும் செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான புதிய மறுபயன்பாட்டு கனரக ராக்கெட்டை உருவாக்குதல் போன்ற திட்டங்கள் இதில் அடங்கும்.

இந்தியாவில் விண்வெளி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட மிகப்பெரிய நிதி ஒதுக்கீடு இதுவே ஆகும். ஆனால் திட்டங்களின் அளவு மற்றும் அதில் ஏற்படக்கூடிய சிக்கல்களை கருத்தில் கொண்டால், இது மிகவும் ஆடம்பரமான செலவு அல்ல. இதுவரையிலும் இந்தியா விண்வெளி திட்டத்திற்காக மிகவும் குறைவாகவே செலவு செய்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

நிலவு, செவ்வாய் கிரகம் மற்றும் சூரியனுக்கு எப்படி குறைந்த செலவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) ஆய்வு பயணங்கள் மேற்கொள்கிறது என்பதை உலகெங்கிலும் உள்ள வல்லுநர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.

By admin