• Thu. Nov 13th, 2025

24×7 Live News

Apdin News

இஸ்லாமாபாத் குண்டுவெடிப்பு: இலங்கை முடிவு குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கூறுவது என்ன?

Byadmin

Nov 13, 2025


இலங்கை மற்றும் பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் உள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் சில வீரர்கள், பாதுகாப்பு காரணங்களால் நாடு திரும்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியம் அவர்களை போட்டியைத் தொடருமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இஸ்லாமாபாத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இலங்கையைச் சேர்ந்த சில வீரர்கள் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளனர். சில வீரர்கள் நாடு திரும்ப விரும்புவதை ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியமும் உறுதிப்படுத்தியுள்ளது.

முன்னதாக 2009 ஆம் ஆண்டில், பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சில வீரர்கள் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், தற்போதைய சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாக வீரர்களிடம் பேசியதாகவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து அவர்களின் அனைத்து கவலைகளும் நிவர்த்தி செய்யப்படுவதாகவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியம் உறுதியளித்துள்ளது.

By admin