• Wed. Feb 25th, 2026

24×7 Live News

Apdin News

‘இஸ்லாமிய உலகில் பாகிஸ்தானுக்கு முக்கியத்துவம் அதிகரிப்பு’ – இஸ்ரேல் முன்னாள் பிரதமரின் எச்சரிக்கை

Byadmin

Feb 25, 2026


இஸ்ரேல் முன்னாள் பிரதமர் நஃப்தாலி பென்னட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இஸ்ரேல் முன்னாள் பிரதமர் நஃப்தாலி பென்னட்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஜெருசலேமில் நடைபெற்ற ‘முக்கிய அமெரிக்க யூத அமைப்புகளின் தலைவர்கள் மாநாட்டில்’ உரையாற்றிய இஸ்ரேல் முன்னாள் பிரதமர் நஃப்தாலி பென்னட், பிராந்தியத்தில் ஒரு புதிய அச்சு உருவாகி வருவதாகவும், அதில் துருக்கி, கத்தார், முஸ்லிம் சகோதரத்துவம் மற்றும் அணுசக்தி கொண்ட பாகிஸ்தான் ஆகியவை இடம்பெற்றுள்ளதாகவும் கூறினார்.

இந்தக் கூட்டணி இஸ்ரேலுக்கு எதிரான விரோதப் போக்கைத் தூண்டிவிடுவதாகவும், செளதி அரேபியாவின் மீதும் செல்வாக்கு செலுத்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் நஃப்தாலி கூறினார்.

இஸ்ரேலுக்கு துருக்கி ஒரு புதிய அச்சுறுத்தலாக மாறி வருவதாகவும், இது குறித்து அரசாங்கம் அறியாமல் இருப்பதாகவும் பென்னட் இந்த மாநாட்டில் எச்சரித்தார்.

மேலும் பென்னட் கூறுகையில், “துருக்கி அதிபர் ரசிப் தையிப் எர்துவான் இஸ்ரேலைச் சூழ்ந்து கொள்ள முயற்சிக்கும் ஒரு ஆபத்தான போட்டியாளர். நாம் மீண்டும் நமது கண்களை மூடிக்கொள்ளக் கூடாது” என்றார்.

“தற்போதைய அரசாங்கம் மீண்டும் ஒருமுறை தூங்கிக்கொண்டிருக்கிறது. நமது எல்லைகளில் அதிகரித்து வரும் அச்சுறுத்தலின் கவலைக்குரிய அறிகுறிகள் தென்படுகின்றன. ஒரு விரோதமான முஸ்லிம் சகோதரத்துவ அச்சு உருவாகியுள்ளது, இதன் பின்னணியில் பாகிஸ்தானின் அணு ஆயுதங்களின் ஆதரவு உள்ளது மற்றும் இதனை வெற்றிபெறும் துடிப்பும், விரோதமும் கொண்ட துருக்கி தலைமை தாங்கி நடத்துகிறது,” என பென்னட் கூறுகிறார்.

By admin