• Thu. Jan 22nd, 2026

24×7 Live News

Apdin News

இஸ்லாமிய நாடான இரானில் போராட்டத்தின் போது மசூதிகளை எரித்தது யார், ஏன்?

Byadmin

Jan 22, 2026


'அபு தார் மசூதி

பட மூலாதாரம், Tasneem News

படக்குறிப்பு, தஸ்னிம் செய்தி நிறுவனம் வெளியிட்ட ‘அபு தார் மசூதி’யின் புகைப்படம்.

இரானில் நாடு தழுவிய எதிர்ப்புப் போராட்டங்களின்போது மதத் தலங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பல மசூதிகளுக்குத் தீ வைக்கப்பட்டதைக் காட்டும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் பெருமளவில் பகிரப்பட்டன.

ஜனவரி 17 அன்று, இரானின் அதியுயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி ஆற்றிய உரையில், நாடு தழுவிய போராட்டங்களின்போது ‘250 மசூதிகள் அழிக்கப்பட்டன’ என்று கூறினார்.

இந்தச் செயலில் ஈடுபட்டவர்களை ‘எதிரி படைகள்’ என்று வர்ணித்த அவர், இத்தகைய “கலவரக்காரர்களின் நோக்கம் புனிதத் தலங்கள், வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தொழிற்துறை மையங்களைத் தாக்குவதே” என்று கூறினார்.

இரான் அதியுயர் தலைவரின் கூற்றுப்படி, “துரோகிகள் மற்றும் பயிற்சி பெற்ற ஏஜென்ட்களின் தலைமையில் அறியாத மக்கள் இந்த மோசமான செயல்களிலும் கடுமையான குற்றங்களிலும் ஈடுபட்டனர்.”

இரானில் இணையக் கட்டுப்பாடுகள் காரணமாக, தாக்குதலுக்கு உள்ளான அல்லது தீ வைக்கப்பட்ட மசூதிகளின் எண்ணிக்கையை ஊடகங்களால் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

By admin