• Fri. Jan 23rd, 2026

24×7 Live News

Apdin News

இஸ்லாமிய நாடுகள் இரான் விவகாரத்தில் ஏன் ஒன்றுபட முடியவில்லை?

Byadmin

Jan 23, 2026


இரான் விவகாரத்தில் இஸ்லாமிய நாடுகள் பிளவுபட்டுள்ளது ஏன் ?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ரௌனக் பைரா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

“முஸ்லிம் நாடுகள் வெளிநாட்டு சக்தி (அமெரிக்கா) ஏற்படுத்தும் அழுத்தங்களுக்கு அடிபணியக்கூடாது. அது பிராந்தியத்தில் தடுமாற்றத்தையும் நண்பர்களுக்கிடையேயான பிளவுகளையும் உருவாக்குகிறது. ஒரு இஸ்லாமிய நாடு வலிமை பெறும்போதெல்லாம் மற்ற இஸ்லாமிய நாடுகள் மகிழ்ச்சியடைய வேண்டும். எங்களது பலம் உங்களுடையது, உங்களது பலம் எங்களுடையது” என்று 2010-ல் நடைபெற்ற ஒரு மாநாட்டின் போது இரானின் அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் மனுசெஹர் மொட்டாகி கூறினார்.

இரான் எப்போதெல்லாம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை எதிர்கொள்கிறதோ, அப்போதெல்லாம் தனது இஸ்லாமிய அடையாளத்தை அது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ஆனால், இந்த அடையாளம் இன்னும் இஸ்லாமிய நாடுகள் தங்கள் நலன்களை விட மத அடையாளத்திற்கு முன்னுரிமை அளிக்கும் அளவுக்குப் பெரிதாக மாறவில்லை.

1979 புரட்சிக்குப் பிறகு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கு தொடர்ந்து சவால் விடும் ஒரே நாடாக இரான் இருந்து வருகிறது.

மற்ற இஸ்லாமிய நாடுகள் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளிகளாக இருப்பது நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது.

By admin