• Wed. Aug 6th, 2025

24×7 Live News

Apdin News

இ20 பெட்ரோல்: 2023-க்கு முந்தைய வாகனங்களில் மைலேஜ் குறைவதுடன் துருப் பிடிக்கவும் செய்யுமா?

Byadmin

Aug 5, 2025


20% எத்தனால் பெட்ரோலை அனைத்து வாகனங்களிலும் பயன்படுத்தலாமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒரு லிட்டர் எரிபொருளில் 800 மில்லி லிட்டர் பெட்ரோல் 200 மில்லி லிட்டர் எத்தனால் கலந்து இ 20 எரிபொருள் விற்கப்படுகிறது

இந்தியாவில் விற்கப்படும் பெட்ரோலில் 20% எத்தனால் கலக்க வேண்டும் என்ற இலக்கு எட்டப்பட்டுவிட்டதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி சமீபத்தில் அறிவித்தது வாகன ஓட்டிகள் பெரும் விவாதத்திற்கு வித்திட்டுள்ளது.

உலகின் மூன்றாவது மிகப்பெரிய மிகப்பெரிய எண்ணெய் (பெட்ரோல், டீசல்) நுகர்வாளரான இந்தியா தனது எண்ணெய் தேவையில் சுமார் 85% வரை இறக்குமதி செய்கிறது.

எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் கீழ், 2014-ல் பெட்ரோலில் எத்தனால் கலப்பு விகிதம் வெறும் 1.5% உடன் தொடங்கியது. 2022 ஜூன் மாதத்தில் பெட்ரோலில் 10% எத்தனால் கலப்பு என்ற இலக்கு எட்டப்பட்டது. இந்த நிலையில் தற்போது நிர்ணயிக்கப்பட்ட கால அளவான 2030-ஐ காட்டிலும் ஐந்து ஆண்டுக்கு முன்னதாகவே 20% எத்தனால் கலப்பு இலக்கு எட்டப்பட்டதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

ஒரு லிட்டர் எரிபொருளில் 800 மில்லி லிட்டர் பெட்ரோல் 200 மில்லி லிட்டர் எத்தனால் கலந்து விற்கப்படும் இ20 (E 20) எரிபொருள் திட்டத்தால் கச்சா எண்ணொய்க்காக வெளிநாடுகளைச் சார்ந்திருப்பது குறையும், கரியமில வாயு வெளியேற்றம் குறையும், கரும்பு விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கும் என்று அரசு கூறுகிறது.

By admin