• Fri. Oct 4th, 2024

24×7 Live News

Apdin News

ஈயின் மூளையில் என்ன இருக்கிறது? அதை கொல்வது ஏன் கடினமாக உள்ளது?

Byadmin

Oct 4, 2024


ஈயின் மூளை எந்தளவுக்கு சிக்கலானதாக உள்ளதோ அந்தளவுக்கு அழகாகவும் உள்ளது. அதன் மூளையில் 1,30,000 செல்களும் 5 கோடி இணைப்புகளும் உள்ளன

பட மூலாதாரம், MRC/Nature

படக்குறிப்பு, ஈயின் மூளை எந்தளவுக்கு சிக்கலானதாக உள்ளதோ அந்தளவுக்கு அழகாகவும் உள்ளது. அதன் மூளையில் 1,30,000 செல்களும் 5 கோடி இணைப்புகளும் உள்ளன

ஈக்களால் நடக்க முடியும், வட்டமிட முடியும், ஆண் இனம் தன் இணையை ஈர்க்க காதல் பாடல்களை கூட பாட முடியும் – இவை அனைத்தையும் ஊசி முனையைவிட சிறிய மூளையின் உதவியால் செய்கின்றன.

‘ஈ’யின் மூளையின் வடிவம் மற்றும் அதன் 1,30,000 செல்கள் மற்றும் 5 கோடி இணைப்புகள் குறித்து முதன்முறையாக ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துள்ளனர்.

இதுவரை வளர்ச்சியடைந்த ஈ ஒன்றின் மூளை குறித்து செய்யப்பட்டுள்ள ஆராய்ச்சியில் இது மிகவும் விரிவானது.

இந்த புதிய கண்டுபிடிப்பு மனித மூளைகள் குறித்த நமது புரிதல்களில் “மிகப்பெரும் முன்னேற்றமாக” அமைந்துள்ளதாக முன்னணி மூளை நிபுணர் ஒருவர் கூறுகிறார்.

By admin