6
அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ராணுவ தாக்குதலை தொடங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி உயிரிழந்தார்.
அதோடு பல உயர் இராணுவ தளபதிகள் மற்றும் அதிகாரிகளும் இந்த தாக்குதல்களில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த போரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள், தெஹ்ரான் உள்ளிட்ட பல நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், டொனால்ட் ட்ரம், ஈரான் மீது மேலும் வலிமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், ஈரான் ஆயுதங்களை கைவிட்டு சரணடைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக அடுத்த ஆறு மாதங்களுக்கு தீவிரமாக போராடும் திறன் தங்களிடம் இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த சூழ்நிலையில், ஈரானின் புதிய உச்ச தலைவரை தேர்வு செய்வதற்காக மதகுருமார்கள் கொண்ட கவுன்சில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் பின்னர், முன்னாள் உச்ச தலைவர் அலி காமேனியின் மகன் மொஜ்தபா காமேனி ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.