6
ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டாக கடந்த 28ம் திகதி தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்திற்கு பின்னர், மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் எதிரிகள் மீது தாக்குதல்கள் தொடர்ந்தும் நடந்து வருகிறது. போர் சூழ்நிலை இந்த பகுதியில் மேலும் பதற்றமானதாக உள்ளது. அதே சமயம், ஈரானில் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஈரான் முக்கிய கடல்வழியான ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் கச்சா எண்ணெய் கப்பல்கள் பாதிக்கப்பட்டு, உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் பெரிய நெருக்கடி உருவாகியுள்ளது.
இந்த சூழ்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் கப்பல்கள் செல்லாமல் தடுக்கப்பட்டால், ஈரானுக்கு எதிராக கடந்த தாக்குதலைவிட 20 மடங்கு அதிகமான தாக்குதலை அமெரிக்கா நடத்தும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
டிரம்ப் கூறுகையில், “ஈரான் எளிதான இலக்குகளை மீண்டும் கட்டமைக்க முடியாது. மரணம், நெருப்பு மற்றும் கோபம் அவர்களை ஆட்சி செய்யும். ஆனால், இது நடக்க கூடாது” என்று தெரிவித்துள்ளார்.