ஈரானின் மிக முக்கிய பொருளாதார மற்றும் எரிசக்தி மையங்களைக் குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஃபார்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி,
தென்மேற்கு ஈரானில் உள்ள மஹ்ஷஹர் சிறப்புப் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் மற்றும் பந்தர் இமாம் வளாகம் ஆகியவற்றை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
அபு அலி, ரிஜால், அமீர் கபீர் உள்ளிட்ட பல முன்னணி பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களின் உள்கட்டமைப்புகள் இந்தத் தாக்குதலில் சேதமடைந்துள்ளன.இந்தத் தாக்குதலில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
அதேபோல் புஷெர் அணுமின் நிலையத்திற்கு அருகில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் கட்டிடங்கள் சேதமடைந்ததாக சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) உறுதிப்படுத்தியுள்ளது. அங்கு பாதுகாப்பு ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, ஈரானின் வான்பரப்பிற்குள் நுழைந்த இரண்டு அமெரிக்கப் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்திருந்தது. இதற்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.