31
ஈரான் தாக்குதலில் இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் ஆதரவு தர மறுப்பது மிகுந்த ஏமாற்றமளிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.
நேட்டோ கூட்டணியில் உள்ள இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் அவற்றின் விமானப் படைத் தளங்களை ஈரானைத் தாக்குவதற்குப் பயன்படுத்த மறுப்புத் தெரிவித்தன.
ஸ்பெயினுடன் அனைத்து வர்த்தகத் தொடர்புகளையும் நிறுத்திக்கொள்ளும்படி, அமெரிக்க நிதியமைச்சருக்குக் கூறியிருப்பதாகவும் பத்திரிகையாளர்களிடம் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தனது நிலைப்பாட்டைத் தற்காத்துப் பேசிய ஸ்பெயின், ஐக்கிய நாட்டு நிறுவனச் சாசனத்துக்குட்பட்ட செயல்களை மட்டுமே ஆதரிக்க முடியும் என்று கூறியுள்ளது.
இங்கிலாந்துடனான உறவும் முன்புபோல் இல்லை என்று டிரம்ப் சாடினார். இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டாமர் (Keir Starmer) ஈரான் மீதான தாக்குதலில் கலந்துகொள்ளத் தொடக்கத்தில் மறுத்தார்.
பிறகு, இங்கிலாந்தின் இரண்டு தளங்களை குறிப்பிட்ட சில தற்காப்பு அம்சங்களுக்கு மட்டும் பயன்படுத்த அவர் அனுமதித்துள்ளார்.