• Sat. Mar 7th, 2026

24×7 Live News

Apdin News

ஈரான் போரில் கனடா ஈடுபடலாம்: அணு ஆயுதங்களுக்கு எதிரான முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கும்!

Byadmin

Mar 7, 2026


ஈரானைச் சுற்றியுள்ள போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான சூழ்நிலையில் கனடா இராணுவ ரீதியாக போரில் ஈடுபடலாம் என அந்நாட்டின் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தெரிவித்துள்ளார்.

நட்பு நாடுகளுக்கு ஆதரவாக கனடா எப்போதும் இருக்கும் என்றும், கனடிய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில், ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதைத் தடுக்க மேற்கொள்ளப்படும் சர்வதேச முயற்சிகளுக்கு கனடா ஆதரவு அளிக்கும் என்றும் கார்னி கூறினார்.

பிரதமர் கார்னி தற்போது அவுஸ்திரேலியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அங்கு செய்தியாளர்களிடம் பேசியபோது இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.

மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல்கள் அனைத்துலகச் சட்டத்திற்கு புறம்பானவை என்றும் அவர் தெரிவித்தார்.

போர் நிலைமை மேலும் தீவிரமடையாமல் இருக்க வேண்டும் என்றும், மோதல் விரைவில் தணிய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

The post ஈரான் போரில் கனடா ஈடுபடலாம்: அணு ஆயுதங்களுக்கு எதிரான முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கும்! appeared first on Vanakkam London.

By admin