• Tue. Mar 24th, 2026

24×7 Live News

Apdin News

ஈரான் மீது தாக்குதல்கள் தொடரும்: நெதன்யாகு கடுமையாக எச்சரிக்கை

Byadmin

Mar 24, 2026


மத்திய கிழக்கில் ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் மோதல் புதிய பரபரப்புடன் தொடர்கிறது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானின் அணு உலைகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளுக்கு எதிரான அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் 5 நாட்களுக்கு ஒத்திவைத்தார்.

இருப்பினும், ஈரான் அரசு போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்று மறுத்துள்ளது. “எங்களின் எச்சரிக்கைக்கு ஜனாதிபதி டிரம்ப் பணிந்துவிட்டார்” எனவும் விமர்சனம் முன்வைத்துள்ளது.

இந்த சூழலில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஈரானின் ஏவுகணை மற்றும் அணு திட்டங்களை முறியடிக்க நடவடிக்கைகள் தொடரும் என்றும், லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் தாக்குதல்கள் தொடரும் என்றும் உறுதி செய்துள்ளார்.

அமெரிக்க ராணுவ ஆதரவுடன் முக்கிய இலக்குகளை அடையும் வாய்ப்பு உள்ளதாகவும், ஈரானின் ராணுவத்திட்டங்களை முறியடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதென அவர் கூறினார்.

இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் மேலும் தீவிரமாகி, ஹார்முஸ் நீரிணை வழியாக வர்த்தகம் மற்றும் மனிதாபிமான நிலைகளில் அபாயங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

By admin