11
இங்கிலாந்தைச் சேர்ந்த தம்பதி லிண்ட்சே (Lindsay) மற்றும் கிரெய்க் ஃபோர்மேன் (Craig Foreman) ஆகியோர் ஈரானில் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜோடி, 2025ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் மோட்டார் சைக்கிளில் சுற்றிப் பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அதன்படி, ஈரான் வழியாக சென்றபோது, அந்நாட்டு பொலிஸார் தம்பதியரை கைது செய்தனர். உளவு பார்த்த குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சாட்டப்பட்டுள்ள நிலையில், தம்பதியர் அந்தக் குற்றச்சாட்டை மறுத்து வருகின்றனர்.
தற்போது அவர்கள் Evin Prison சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஈரான் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை “முற்றிலும் பயங்கரமானது மற்றும் நியாயப்படுத்த முடியாதது” என இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் Yvette Cooper விமர்சித்துள்ளார். மேலும், தம்பதியர்கள் பாதுகாப்பாக இங்கிலாந்து திரும்புவதற்கு இடைவிடாமல் முயற்சி செய்யப்படுவதாக அவர் உறுதியளித்துள்ளார்.