• Wed. Jan 15th, 2025

24×7 Live News

Apdin News

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: எதிர்கட்சிகள் புறக்கணிப்பு சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?

Byadmin

Jan 14, 2025


ஈரோடு சட்டமன்ற இடைத் தேர்தல்

பட மூலாதாரம், twitter

  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத் தேர்தலை தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. இடைத்தேர்தல்களை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பது எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?

ஈரோடு கிழக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணமடைந்ததால், அந்தத் தொகுதிக்கு பிப்ரவரி 5-ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்குமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

2021-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அத்தொகுதியில் காங்கிரசின் சார்பில் திருமகன் ஈ.வெ.ரா. போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

ஆனால், 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ஆம் தேதி அவர் உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து அந்தத் தொகுதிக்கு 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த இடைத் தேர்தலில் காங்கிரசின் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

By admin