பெரியாரை விமர்சித்து, அண்ணாவை புகழ்ந்த சீமான் – ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாதகவுக்கு கைகொடுத்ததா?
ஒருபுறம், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. மறுபுறம், டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்தி, பாஜக 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முக்கிய எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில், நாம் தமிழர் கட்சி தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தியதா? தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன?
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் கிடைத்துள்ள இந்த வெற்றி பாஜகவுக்கு எவ்வளவு முக்கியமானது? பாஜகவின் இந்த வெற்றிக்கு உதவிய உத்திகள் என்ன?
இத்தகைய பல கேள்விகளுக்கு பிபிசி தமிழுடனான நேர்காணலில் பதில் அளித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். விரிவாக வீடியோவில்…
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு