• Wed. Sep 10th, 2025

24×7 Live News

Apdin News

ஈலோன் மஸ்குடன் பழைய பகை; எக்ஸ் தளத்தில் இந்தியா மீது விமர்சனம் – பிராமணர்களை விமர்சித்த பீட்டர் நவரோவின் பின்னணி

Byadmin

Sep 8, 2025


காணொளிக் குறிப்பு, ஈலோன் மஸ்க், நவாரோ இடையே என்ன பிரச்னை?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ மீண்டும் செய்திகளில் தென்பட்டுள்ளார்.

நவரோ தனது X சமூகவலைதள பக்கத்தில், “இந்திய அரசின் பிரசாரக் குழு முழு பலத்துடன் செயல்படுகிறது” என மஸ்க்கை மேற்கோள் காட்டி குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் இந்த விவகாரம் அவரின் முந்தைய பதிவுடன் தொடர்புடையது. இதற்கு முன்பாக அவர் வெளியிட்ட பதிவின் கீழ் உண்மையை சரிபார்க்கும் (Fact Check) வகையில் X தளத்தின் விளக்கக் குறிப்பு (community note) இடம்பெற்றிருந்தது.

இதனால் நவரோ கடும் கோபடைந்துள்ளார். ஈலோன் மஸ்கின் இந்த செயல் குறித்து குற்றம்சாட்டியுள்ளார். எனினும் ஈலோன் மஸ்க் இதுவரை இதற்கு பதில் அளிக்கவில்லை.

By admin