• Wed. Jun 4th, 2025

24×7 Live News

Apdin News

ஈலோன் மஸ்க் டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து வெளியேறுகிறார் – அமெரிக்காவில் என்ன நடக்கிறது?

Byadmin

May 29, 2025


வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறும் மஸ்க்

பட மூலாதாரம், Getty Images

அதிபர் டொனால்ட் டிரம்பின் செலவுக் குறைப்பு பணிக்குழுவை (DOGE) வழிநடத்தும் தனது நேரம் “முடிவுக்கு வருகிறது” என்று கோடீஸ்வரர் ஈலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

ஈலோன் மஸ்க் தனது எக்ஸ் சமூக ஊடக தளத்தில், டோஜ் (DOGE) என்று அழைக்கப்படும் அரசாங்க செயல்திறன் துறையை வழிநடத்த வாய்ப்பு அளித்தமைக்காக டிரம்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மஸ்க் ஒரு “சிறப்பு அரசாங்க ஊழியர்” ஆக நியமிக்கப்பட்டிருந்தார்- ஒவ்வொரு ஆண்டும் 130 நாட்கள் அரசு வேலையில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜனவரி 20-ஆம் தேதி டிரம்ப் பதவியேற்றதிலிருந்து கணக்கிட்டால், மே மாத இறுதியில் அவரது பணிக்காலம் முடிவடைகிறது.

டிரம்பின் பட்ஜெட் மசோதாவை விமர்சித்திருந்த நிலையில், மஸ்க் வெளியேறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மசோதா டிரம்ப் நிறைவேற்ற நினைக்கும் முக்கியமான மசோதாவாகும்.

By admin