• Sat. May 23rd, 2026

24×7 Live News

Apdin News

ஈஸ்டர் தாக்குதலுக்கு பின் பிள்ளையானை சந்தித்த ராஜபக்ஸ குடும்பம் – நாமல் ராஜபக்ஸ கூறுவது என்ன?

Byadmin

May 23, 2026


நாமல் ராஜபக்ஸ

பட மூலாதாரம், SLPP

    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இலங்கையில் 2019ம் ஆண்டு நடாத்தப்பட்ட ஈஸ்டர் குண்டு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே செயற்பட்டுள்ளதாக சட்ட மாஅதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மே 20 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றப் புலனாய்வு திணைக்களம் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் திலிப பீரிஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றமை தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் இந்த வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

தேர்தல் ஒன்றை இலக்காக கொண்டு இந்த ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாகவும் திலிப பீரிஸ் கூறியுள்ளார்.

எனினும், நீதவான் முன்னிலையில் தனது தரப்பைச் சேர்ந்த சுரேஸ் சலே வாக்குமூலம் ஒன்றை வழங்க வேண்டும் எனவும், அதற்கு இடமளிக்குமாறும் சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் நீதவானிடம் கோரிக்கை முன்வைத்தார்.

By admin