0
உகாண்டாவின் தற்போதைய ஜனாதிபதி யோவேரி முசேவேனி (Yoweri Museveni) ஏழாவது முறையாக மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 81 வயதான முசேவேனி, 71.65 சதவீத வாக்குகளைப் பெற்று இந்த வெற்றியை பெற்றுள்ளார்.
அதிகாரப்பூர்வ முடிவுகளின்படி, அவர் தனது முக்கிய போட்டியாளரான 43 வயதான போபி வைன் (Bobi Wine) ஐ தோற்கடித்துள்ளார். போபி வைன் 24.72 சதவீத வாக்குகளைப் பெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
1986ஆம் ஆண்டு முதல் உகாண்டாவின் ஜனாதிபதியாக பதவி வகித்து வரும் யோவேரி முசேவேனி, இணைய சேவை முடக்கம், பாதுகாப்புப் படைகளின் ஆதிக்கம் உள்ளிட்ட பல சர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் அதிகாரத்தைத் தக்கவைத்துள்ளார். அவரது நீண்ட 40 ஆண்டு கால ஆட்சி இம்முறை முடிவுக்கு வரும் என பலரும் எதிர்பார்த்த நிலையில், முசேவேனியின் இந்த வெற்றி குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.