• Wed. Aug 13th, 2025

24×7 Live News

Apdin News

உங்கள் இரு பாதங்களின் ஆரோக்கியத்தை அறியும் ஒரு நிமிட எளிய சோதனை என்ன?

Byadmin

Aug 13, 2025


கால் பயிற்சி, உடல்நலம், பாதங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நமது பாதங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருந்தாலும் பலரும் அது இருப்பதை மறுந்துவிடுகின்றனர்.

    • எழுதியவர், ரஃபேல் அபுசாய்பே
    • பதவி, பிபிசி நியூஸ் முண்டோ

மனித உடலமைப்பின் மிகவும் அற்புதமான படைப்புகள் தான் நமது பாதங்கள்.

மிகவும் நிலையான, இந்த முக்கோண வடிவ அமைப்புக்குள், 26 எலும்புகள், 33 மூட்டுகள், மற்றும் 100-க்கும் மேற்பட்ட தசைகள், தசைநார்கள், தசைநாண்கள் இணைந்து வேலை செய்கின்றன.

இவை நம்மை நிலையாக நிற்க வைக்க, நடக்க, முன்னோக்கி நகர்த்தும் சக்தியை தருகின்றன.

“இந்த அமைப்பு சிறியதுதான், ஆனால் மிகவும் சிக்கலானது. பல பகுதிகள் ஒருசேர வேலை செய்வதால், அதிர்வுகளை உள்வாங்கி, அந்த சக்தியை உடல் முழுவதும் பரப்ப முடிகிறது “என்று பாத மருத்துவரும், விளையாட்டு நிபுணருமான ஜோசஃபினா டோஸ்கானோ கூறுகிறார்.

By admin