• Tue. Jan 13th, 2026

24×7 Live News

Apdin News

உச்சத்தில் திமுக – காங்கிரஸ் உரசல்: இனி கூட்டணி எதை நோக்கி நகரும்?

Byadmin

Jan 13, 2026


'2006ல் செய்த பிழையை செய்ய மாட்டோம்':  காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Images

2006-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியில் பங்கு பெறும் வாய்ப்பை தவறவிட்டதாகவும் 2026ல் அதனை சாத்தியமாக்க விரும்புவதாகவும் சொல்கிறார் அக்கட்சியின் எம்.பியான மாணிக்கம் தாகூர். ஆனால், தி.மு.க. அதனை ஏற்பதாகத் தெரியவில்லை. என்ன நடக்கிறது கூட்டணியில்?

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் ஆட்சியிலும் பங்கு வேண்டுமென்ற குரலைத் தீவிரமாக ஒலிக்க ஆரம்பித்துள்ளனர்.

2006ல் செய்த பிழையை இந்த முறை செய்ய மாட்டோம் என்கிறார் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான மாணிக்கம் தாகூர்.

2026ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தலுக்கு என தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையில் அமையவிருக்கும் கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறும்போது, ஆட்சியிலும் பங்களிக்க வேண்டும் என கடந்த சில நாட்களாக தீவிரமாக வலியுறுத்தி வருகிறார் மாணிக்கம் தாகூர்,

அவரது இந்தக் கருத்துக்கு தி.மு.க. தலைமை நேரடியாகப் பதிலளிக்கவில்லையென்றாலும் அடுத்தகட்டத் தலைவர்களில் சிலர் இந்தக் கோரிக்கையை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

By admin