• Fri. Apr 24th, 2026

24×7 Live News

Apdin News

உடன்குடியில் பஸ் சக்கரத்தில் சிக்கி 2 வயது பெண் குழந்தை பலி

Byadmin

Apr 24, 2026


உடன்குடி:

சாத்தான்குளம் அருகே தச்சன் மொழியைச் சேர்ந்த பேச்சிமுத்து ஒதுவாராக உள்ளார். இவர் நேற்று மதியம் தனது மகள் மகிழினி (2) உடன் தனது எலெட்ரிக் பைக்கில் உடன்குடி பஜாருக்கு பூஜை பொருட்கள் வாங்க வந்துள்ளார். பின்னர் சாத்தான்குளத்திற்கு திரும்பியுள்ளார். அப்போது உடன்குடி – திசையன்விளை ரோட்டில் உடன்குடியில் இருந்து திசையன்விளைக்கு சென்ற அரசு பஸ்சை முந்தி செல்ல முயன்றபோது எதிர்பாரதவிதமாக பைக்கில் இருந்த குழந்தை பஸ்ஸின் பின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு குலசேகரன்பட்டினம் இன்ஸ்பெக்டர் பிரபு பாஸ்கரன் வந்து விசாரணை நடத்தினார். இது குறித்து அரசு பஸ் டிரைவர் திருநெல்வேலி சங்கர் நகரைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் கருப்பசாமி (38) பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 வயது பெண் குழந்தை பஸ் சக்கரத்தில் சிக்கி இறந்த சம்பவம் உடன்குடியில் சோகத்தை ஏற்படுத்தியது.

By admin