• Fri. Nov 15th, 2024

24×7 Live News

Apdin News

உடல் நலம்: மஞ்சள், மிளகாய் போன்ற மசாலா பொருட்களால் உடலுக்கு ஆரோக்கியமா? ஆபத்தா?

Byadmin

Nov 10, 2024


மஞ்சள், மிளகாய் போன்ற மசாலா பொருட்கள் உடலுக்கு உண்மையிலேயே நல்லதா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தினமும் மிளகாய் சாப்பிடுபவர்களுக்கு, இறப்புக்கான ஆபத்து குறைவதாக, ஒரு ஆய்வு கூறுகிறது

மிளகாய், மஞ்சள் மற்றும் மற்ற மசாலா பொருட்கள் ஆரோக்கியத்திற்கு பலனளிக்கும் என்ற கூற்றுகள் உள்ளன. “நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும்” என்றும் கூறப்படுவது உண்டு. ஆனால், நம் உணவில் இத்தகைய மசாலா பொருட்கள் உண்மையில் ஆரோக்கியத்தை அளிக்கிறதா? உடல்நலக்குறைவு ஏற்படுவதிலிருந்து அவை நம்மை தடுக்கிறதா?

பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மசாலா பொருட்கள் நம் உணவின் அங்கமாக உள்ளன. சிப்ஸ் வகைகளில் மேலே தூவியோ அல்லது இஞ்சி தேநீராகவோ, நம்முடைய உணவில் சேர்க்கப்படும் மிளகாயாகவோ அவற்றை நாம் உட்கொள்கிறோம். ஆனால், சில ஆண்டுகளாக அனைத்து விதமான நோய்களையும் குணப்படுத்தக் கூடிய சிறந்த உணவுகளாக அவை அதிகாரப்பூர்வமற்ற முறையில் விற்பனை செய்யப்படுகின்றன.

உடல்நல பிரச்னைகளை தடுக்கும் பொருட்டு, 2016 தேர்தல் பிரசாரங்களின் போது நாளொன்றுக்கு ஒரு மிளகாயை ஹிலாரி கிளிண்டன் சாப்பிட்டதாக தகவல்கள் உள்ளன. ஆசியாவில் ஆயிரம் ஆண்டுகளாக உட்கொள்ளப்பட்டு வரும் மஞ்சள், உலகம் முழுவதிலும் உள்ள காபி கடைகளில் “கோல்டன் லேட்டே” (மஞ்சள் கலந்த பால்) எனும் பெயரில் சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. பெருந்தொற்று காலத்தில் மஞ்சள் “நம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும்”, வியாதியிலிருந்து நம்மை காக்கும் என்றும் மெசேஜ்கள் பரவின. அந்த மஞ்சள், ஒரு பிரபல சமையல் கலைஞர் கூற்றுப்படி “எங்கும் உள்ளது.”

இதனிடையே, 2013-ல் “பெயோன்ஸ் டயட்” எனும் தவறான ஆலோசனையில் இருந்து (முற்றிலும் தாவர வகையிலான உணவுப்பழக்கம்) இருந்து கெயென் மிளகாய் (ஒருவித குடை மிளகாய்) இன்னும் மீளவில்லை. அதன்படி, அந்த மிளகாயை மேப்பிள் சிரப், எலுமிச்சை பழம் மற்றும் தண்ணீர் கலந்து சாப்பிட்டால் உடல் எடை குறையும் என கூறப்பட்டது.

By admin