• Fri. Jan 17th, 2025

24×7 Live News

Apdin News

உடல் பருமன்: அதிக எடை, பிஎம்ஐ இருப்பவர்கள் ஆரோக்கியமானவர்கள் இல்லையா?

Byadmin

Jan 17, 2025


உடலில் அதிகப்படியான கொழுப்பு உள்ளவர்கள் கூட சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க முடியும்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உடலில் அதிகப்படியான கொழுப்பு உள்ளவர்கள் கூட சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்

பலர் அதிக பருமனாக இருப்பதாக தவறாகக் கண்டறியப்படும் அபாயம் உள்ளது, அதனால் ‘மிகவும் துல்லியமான’ மற்றும் ‘நுணுக்கமான’ வரையறை தேவைப்படுகின்றது என்று உலகளாவிய நிபுணர்களின் அறிக்கை பரிந்துரைக்கிறது.

அதிக கொழுப்பு உள்ள நோயாளிகளின் ‘உடல் நிறை குறியீட்டை (பிஎம்ஐ)’ மட்டுமே நம்பாமல், அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மருத்துவர்கள் உற்றுநோக்க வேண்டும் என்று அறிக்கை பரிந்துரைக்கிறது.

உடல் எடையால் ஏற்படும் நீண்ட கால நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் ‘கிளினிக்கல் உடல் பருமன்’ அதாவது ‘மருத்துவ சிகிச்சை தேவைப்படும் உடல் பருமன் கொண்டவர்கள்’ என்று கண்டறியப்பட வேண்டும்.

அதே சமயம், உடல்நலப் பிரச்னைகள் இல்லாதவர்கள் ‘ப்ரீ-கிளினிக்கல் உடல் பருமன் கொண்டவர்கள்’, அதாவது மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதற்கு முன்பான நிலையில் உடல் பருமன் உடையவர்கள் என்று குறிப்பிடப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



By admin