0
நெருப்புத் துண்டுகளை விழுங்கி
மரணம் விட்டெறிந்த தேசத்தில்
இருளின் மறைவிலே
நிர்வாணத்தை ஒழித்து
அதிகாரத்தின்
காலடியில் அம்மணமாய் சிலர். .!!
அவர்கள்
நல்லிணக்கத்தை உதிர்க்கும் போதெல்லாம்
மீண்டும் மீண்டும்
அகதியாக்கப்படுகிறேன். .
சொந்தப் பெயரை துறந்து
குருதி படர்ந்த வெள்ளை துணிக்குள்
நிலத்தை விற்றவர்கள்
தம்மபதத்தையும். .!!
சித்தார்ந்தனையும். .!
வெளிப்படையாக சூடிக் கொள்கிறார்கள்
நேற்றும் சிவில் உடையில் வந்தவர்கள்
என்னிடம் விலை பேசினார்கள்
ஆனால்
அவர்கள் நடந்த தெருக்கள்
அவர்கள் சுவாசித்த காற்று
தொக்கி நிற்கும் வேட்கை
என் உணர்வின் விலையை
கூட்டிக் கொண்டே செல்கின்றன..
-பாலா சயந்தன்