• Sun. May 4th, 2025

24×7 Live News

Apdin News

உணவை தியாகம் செய்வது நல்ல மனைவியின் செயல் இல்லை! பெண்களுக்கும் உணவுக்குமான உறவு ஏன் பேசப்படாத ஒன்றாக உள்ளது?

Byadmin

May 4, 2025


உணவும் பெண்களும், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்கின்றனரா இந்திய பெண்கள்?

பட மூலாதாரம், Getty Images

“அது ஒரு நல்ல மதிய வேளை. என் அம்மாவும், நானும், என் தங்கையும் என் அப்பாவின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தோம். ஞாயிறு என்பதால் அசைவ உணவு பதார்த்தங்களை சமைத்து வைத்துவிட்டு காத்துக் கொண்டிருந்தோம். ஆனால் அப்பா வீட்டுக்கு வர தாமதமானது. அம்மா, என்னையையும் என் தங்கையையும் சாப்பிடக் கூறிவிட்டு என் அப்பாவின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தார். அன்று அவர்கள் இருவரும் 5 மணிக்கு மேல் மதிய உணவை சாப்பிட்டார்கள்,”

“ஆனால் கடந்த 30 வருடங்களாக, ஒவ்வொரு உணவு வேளையும் என் அம்மாவுக்கு இப்படித்தான் செல்கிறது. எந்த ஒரு ஞாயிறு அன்றும் எங்கள் வீட்டில் என் அம்மா, அனைவருக்கும் முன்பாக உணவு சாப்பிட்டதாக ஞாபகமே இல்லை,” என்று கூறுகிறார் பிபிசி தமிழிடம் பேசிய பிரசாந்த்.

இந்த செய்திக்காக நான் பேசிய பலர் வீட்டிலும் இது தான் நிலைமை. உணவு, பெண்கள் உண்ணும் உணவு என்பது எப்போதாவது, எங்காவது, என்றைக்காவது விவாதம் ஆகும் ஒரு செயல்.

ஆனால் உண்மையில் பன்முகக் கலாச்சாரத்தைக் கொண்ட இந்திய சமூகத்தில் பெண்களின் உணவு குறித்து எப்போது பேசப்படுகிறது? பெண்களின் ஆரோக்கியம் குறித்து எப்போது அதீத ஆர்வம் காட்டப்படுகிறது? உணவு அரசியலில் பெண்கள் உண்ணும் உணவு எவ்வாறு அணுகப்படுகிறது? நம்முடைய உணவுகள் ஆணாதிக்க எண்ணங்களுடன் பகிரப்படுகிறதா?

By admin