• Sat. Apr 26th, 2025

24×7 Live News

Apdin News

உதகை ஆளுநர் மாநாட்டை புறக்கணித்த மாநில பல்கலை. துணைவேந்தர்கள் போலீஸார் மிரட்டியதா?

Byadmin

Apr 26, 2025


ஆளுநர் ஆர்.என். ரவி, ஜெகதீப் தன்கர், துணைவேந்தர்கள் மாநாடு

பட மூலாதாரம், tnrajbhavan

தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பு, திராவிட இயக்கத்தினரின் போராட்டங்களுக்கு மத்தியில் உதகையில் இருநாள் துணைவேந்தர்கள் மாநாடு இன்று (ஏப். 25) ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் தொடங்கியது.

மத்திய பல்கலைக்கழகம் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், மத்திய அரசின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டில் செயல்படும் மாநில அரசு பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் யாரும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை.

“மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் வீட்டு கதவுகளை நள்ளிரவில் தட்டி போலீஸார் எச்சரித்ததாலேயே” அவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார், மாநாட்டில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி.

இந்த குற்றச்சாட்டை கடுமையாக மறுத்துள்ளார், திமுக மூத்த தலைவரும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான டி.கே.எஸ். இளங்கோவன்.

By admin