• Wed. Mar 19th, 2025

24×7 Live News

Apdin News

உதகை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ரூ.70 கோடியில் பூங்கா – புதிய மரங்களை வளர்த்தால் நிலம் வீணாகிவிடுமா?

Byadmin

Mar 18, 2025


உதகை, ரேஸ்கோர்ஸ் மைதானம், சுற்றுச்சூழல் பூங்கா, தமிழ்நாடு அரசு

பட மூலாதாரம், Spl Arrangement

படக்குறிப்பு, சர்வதேச சுற்றுலா நகரமாகவுள்ள உதகை நகரின் நடுவில், 54 ஏக்கர் பரப்பளவில் நீள்வட்டமாக அமைந்துள்ளது ரேஸ்கோர்ஸ்

உதகை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ரூ.70 கோடி மதிப்பில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ், அந்தப் பகுதியில் கட்டடங்கள் எதையும் கட்டாமல், ஈரநிலமாகவே பாதுகாக்க வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

இப்போது வரையிலும் இதற்கான முன்மொழிவு எதுவும் தோட்டக்கலைத் துறைக்கு வரவில்லை என்பதால், இந்தப் பூங்கா எந்தத் துறையால் எப்படி அமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

சர்வதேச சுற்றுலா நகரமாகவுள்ள உதகை நகரின் நடுவில், 54 ஏக்கர் பரப்பளவில் நீள்வட்டமாக அமைந்துள்ளது ரேஸ்கோர்ஸ். ஆங்கிலேயர் காலத்தில் இருந்து குதிரைப் பந்தய மைதானமாக இருந்து வந்த இந்த நிலம், வருவாய்த் துறையால் ஊட்டி ரேஸ் கிளப்புக்கு குத்தகைக்குத் தரப்பட்டு, பின்பு மெட்ராஸ் ரேஸ் கிளப் கைக்கு மாறியது.

இதில் ஒவ்வோர் ஆண்டும் கோடைக் காலத்தின்போது, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலும் குதிரைப் பந்தயங்கள் நடைபெறுவது வழக்கமாக இருந்தது. இந்த நிலத்துக்கான குத்தகைத் தொகை உள்பட தமிழக அரசுக்கும், மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கும் இடையே பல்வேறு வழக்குகள் நடந்து வந்தன.

By admin