• Fri. Feb 6th, 2026

24×7 Live News

Apdin News

உத்தரகண்டில் முஸ்லிம் முதியவரின் கடை பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்து அமைப்பினர் – அங்கு ‘முகமது தீபக்’ செய்தது என்ன?

Byadmin

Feb 6, 2026


தீபக்' மற்றும் வக்கீல் அகமது

பட மூலாதாரம், Asif Ali/BBC

படக்குறிப்பு, உத்தரகண்டின் கோட்வாரில் ஜனவரி 26 அன்று நடந்த சம்பவத்திற்குப் பிறகு ‘முகமது தீபக்’ மற்றும் வக்கீல் அகமது முதல்முறையாகச் சந்தித்தனர்.

ஒரு ஜிம் பயிற்சியாளர் மற்றும் ஒரு முதியவர் – இரு வேறு தலைமுறைகள், வெவ்வேறு பின்னணியிலிருந்து வரும் மனிதர்கள். ஆனால் ஒரு சம்பவம் இவர்கள் இருவரின் வாழ்க்கையையும் நேருக்கு நேர் கொண்டு வந்துவிட்டது.

உத்தரகண்டின் கோட்வாரில் ஜனவரி 26 அன்று ஆடை விற்பனை கடை ஒன்றின் பெயரைப் பற்றிய சர்ச்சைக்குப் பிறகு, இவர்கள் இருவரும் நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளனர்.

அந்தச் சம்பவம் இவர்கள் இருவரின் வாழ்க்கையையும் வெவ்வேறு விதமாகப் பாதித்துள்ளது.

தீபக் காஷ்யப் மற்றும் சர்ச்சை தொடங்கிய ‘பாபா கலெக்ஷன்’ கடை உரிமையாளர் வக்கீல் அகமது ஆகியோர் ஒன்றாக பிபிசியிடம் பேசினர்.

இவர்கள் இருவரின் சந்திப்பும் தீபக்கின் பிறந்தநாள் அன்று நிகழ்ந்தது. பிறந்தநாள் சந்தர்ப்பத்திலும், இந்த முழு நிகழ்வுகளுக்கு மத்தியிலும் வக்கீல் அகமதுவைப் பார்த்தது தனக்கு நிம்மதி அளிப்பதாக அவர் கூறுகிறார்.

By admin