• Mon. Oct 28th, 2024

24×7 Live News

Apdin News

உத்தரகாசி: உத்தரகாண்டில் மசூதிக்கு எதிரான பேரணியில் கல் வீச்சு, தடியடி – என்ன நடந்தது?

Byadmin

Oct 28, 2024


உத்தரகாசி, மசூதிக்கு எதிராக பேரணி, வன்முறை

பட மூலாதாரம், Asif Ali

படக்குறிப்பு, உத்தரகாசியில் உள்ள ஒரு மசூதிக்கு எதிராக “ஜன் ஆக்ரோஷ்” என்னும் பேரணி நடத்தப்பட்டது

  • எழுதியவர், ஆசிப் அலி
  • பதவி, பிபிசி ஹிந்திக்காக

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் ஒரு மசூதிக்கு எதிராக “ஜன் ஆக்ரோஷ்” என்னும் பேரணி நடத்தப்பட்டது. அதில் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் 8 பேர் மற்றும் அடையாளம் தெரியாத 200 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பேரணியில் வன்முறை வெடித்ததால் போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் பலர் காயமடைந்தனர்.

உத்தரகாசியில், மசூதி ஒன்று அரசு நிலத்தில் கட்டப்பட்டுள்ளது என்றும், சட்டவிரோதமானது என்றும் சில இந்து அமைப்புகள் அக்டோபர் 24ஆம் தேதி பேரணி நடத்தி எதிர்ப்பு தெரிவித்தன.

மசூதி அமைந்திருக்கும் இடத்திற்கான சரியான ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாக பள்ளிவாசல் கமிட்டி கூறுகிறது. பேரணியின் போது ஏற்பட்ட வன்முறைக்குப் பிறகு, பேரணி நடந்த அன்று நள்ளிரவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

By admin