• Fri. Jan 9th, 2026

24×7 Live News

Apdin News

உத்தரபிரதேசம்: நாய்க்கடியால் இறந்த எருமையின் பாலில் இருந்து ரேபிஸ் பரவுமா? கிராம மக்கள் அச்சம்

Byadmin

Jan 8, 2026


நாய்க்கடி, ரேபிஸ், ரேபிஸ் தடுப்பூசி, உத்தர பிரதேசம் ரேபிஸ்

பட மூலாதாரம், AMIT KUMAR

படக்குறிப்பு, ரேபிஸ் தடுப்பூசி பெறுவதற்காக பெண்கள் வரிசையில் நிற்கின்றனர்.

    • எழுதியவர், சையது மொஸீஸ் இமாம்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

உத்தரபிரதேசத்தின் பதாவுன் மாவட்டத்தில் இறந்தவர் ஒருவரின் 13-ஆம் நாள் சடங்கில் தயிர் பச்சடி சாப்பிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் ரேபிஸ் தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

பதாவுன் மாவட்டத்தின் உஜைனி காவல்நிலைய பகுதிக்கு உட்பட்ட பிப்ரௌல் கிராமத்தில் நடைபெற்ற 13-ஆம் நாள் சடங்கில் கலந்துகொண்டவர்களுக்கு தயிர் பச்சடி வழங்கப்பட்டுள்ளது.

அந்த தயிர் பச்சடி தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பால் கறக்கப்பட்ட எருமைகளுள் ஒன்று இறந்துவிட்டதாக கிராமத்தினருக்கு பின்னர் தெரியவந்துள்ளது. அந்த எருமையை நாய் ஒன்று கடித்துவிட்டதாகவும் அதன்பின் எருமைக்கு ரேபிஸ் அறிகுறிகள் தென்பட்டதாகவும் கிராமத்தினர் கூறினர்.

லக்னௌவை சேர்ந்த மருத்துவர் பகார் ரஸா கூறுகையில், “ரேபிஸ் தாக்கப்பட்ட கால்நடைகளிடமிருந்து பாலை உட்கொண்டால், ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம்,” என்றார்.

“ரேபிஸ் தொற்று ஏற்பட்டால் அதற்கு சிகிச்சை அளிப்பது மிகவும் கடினம். எனவே, முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி செலுத்திக் கொள்வது நல்லது,” என பதாவுன் முதன்மை மருத்துவ அதிகாரி (CMO) ராமேஷ்வர் மிஷ்ரா கூறுகிறார்.

By admin