• Wed. Feb 25th, 2026

24×7 Live News

Apdin News

உத்தரபிரதேசம்: ‘நீட்’ தகராறில் தந்தையையே கொன்ற மகன் – என்ன நடந்தது?

Byadmin

Feb 25, 2026


துப்பாக்கி, துப்பாக்கி உரிமம், லக்னோ

பட மூலாதாரம், Sarfuddin/BBC

படக்குறிப்பு, துப்பாக்கி வைத்திருக்கும் உரிமம் வைத்திருந்த மன்வேந்திர சிங், தனது மகனால் சுட்டுக் கொல்லப்பட்டார்

(குறிப்பு: இந்தக் கட்டுரையின் சில பகுதிகள் உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கலாம்.)

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் ஆடம்பரமான பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் ஒருவரின் உடல் பாகங்கள் அவரது வீட்டிலிருந்த பிளாஸ்டிக் பேரலில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஜாலவுன் பகுதியைச் சேர்ந்த 49 வயதான மானவேந்திர பிரதாப் சிங், லக்னோவில் தொழில் செய்து வந்தார்.

பிப்ரவரி 20-ம் தேதி காணமல் போனதாக அவர் தேடப்பட்டு வந்த நிலையில், அவரின் உடல் பல துண்டுகளாக வெட்டப்பட்டு சில பாகங்கள் நகரின் வெவ்வேறு பகுதிகளில் வீசப்பட்டிருந்தன.

இதுதொடர்பாக அவரது மகன், 21 வயதான அக்ஷத் பிரதாப் சிங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து பேசிய துணை போலீஸ் ஆணையர் விக்ராந்த் வீர், “அக்ஷத் பிரதாப் சிங் தனது தந்தையை கொன்ற குற்றத்தை ஒப்புக்கொண்டார். முதற்கட்ட விசாரணையில், பிப்ரவரி 20 அன்று அவருக்கும் அவரது தந்தைக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், அவர் தனது தந்தையைச் சுட்டுக் கொன்றதாகவும் தெரிவித்துள்ளார்” என்றார்.

By admin