பட மூலாதாரம், ANI
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் செவ்வாய்க்கிழமை மேக வெடிப்பால் பெருமழை கொட்டியது. இதனால் ஹர்ஷில் பகுதியில் உள்ள கீர் கங்கா கடேராவின் (ஆழமான பள்ளம் அல்லது கால்வாய்) நீர் மட்டம் திடீரென உயர்ந்து, அங்குள்ள தாராலி கிராமத்தை வெள்ளத்தில் மூழ்கடித்தது.
பட மூலாதாரம், ANI
இதுவரை கிடைத்த தகவல்களின்படி, நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும், சில கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் உத்தரகாசி ஆட்சியர் பிரசாந்த் ஆர்யா தெரிவித்தார்.
பட மூலாதாரம், X/@UttarkashiPol
இந்தச் சம்பவம் குறித்து உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வருத்தம் தெரிவித்துள்ளார். உயர் அதிகாரிகளிடம் பேசி வருவதாகவும், அவ்வப்போது நிலைமையை கண்காணித்து வருவதாகவும் அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பட மூலாதாரம், ANI
“மேக வெடிப்பு பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. தண்ணீரும் குப்பைகளும் மிக வேகமாக வந்துள்ளன. நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ள நாங்கள் முயற்சிக்கிறோம். மாவட்ட நிர்வாகம் சம்பவ இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறது” என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் முதலமைச்சர் தாமி தெரிவித்தார்.