• Wed. Nov 6th, 2024

24×7 Live News

Apdin News

உயர் நீதிமன்றத்தில் புதிதாக 2 கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் நியமனம் | Appointment of 2 Additional Chief Advocates

Byadmin

Nov 6, 2024


சென்னை: உயர் நீதிமன்றத்தில் புதிதாக மேலும் 2 கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தரப்பில் ஆஜராகி வாதிட தலைமை வழக்கறிஞர், கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள், மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர், மாநில அரசு ப்ளீடர் மற்றும் சிறப்பு வழக்கறிஞர்கள் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மேலும் 2 பேரை புதிதாக கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்களாக நியமித்து தமிழக அரசின் பொதுத்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் நீண்டகால உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டத்துறை மாநிலத் தலைவருமான கே.சந்திரமோகன் மற்றும் வழக்கறிஞர் எம்.சுரேஷ்குமார் ஆகியோர் புதிய கூடுதல் தலைமை வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கே.சந்திரமோகன், அரியலூர் தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ஆர்.கருப்பையாவின் மகன் என்பதும், பார் கவுன்சில் முன்னாள் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எம்.சுரேஷ்குமாரின் தந்தை முத்தையா, மாவட்ட நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.



By admin