உருக்குலைந்த கட்டடங்கள்: மியான்மர், தாய்லாந்தை நடுங்க வைத்த நிலநடுக்கம் – அதிர்ச்சி வீடியோ
நிலநடுக்கம் 7.7 என்ற அளவில் ஏற்பட்டதாகவும், அதன் மையப்புள்ளி பர்மிய நகரான சர்காயிங்-ன் வடமேற்கில் 16 கிலோமீட்டரில் அமைந்திருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மியான்மரில் ஏராளமான கட்டடங்கள், கோவில்கள் போன்றவை நிலநடுக்கத்தில் உருகுலைந்துப் போய் இருப்பதை காணொளிகளில் காண முடிகிறது.
தலைநகர் நேப்பிடோவில் (Naypyidaw) கட்டடங்கள் சேதமடைந்திருப்பதோடு சாலைகளிலும் விரிசல் ஏற்பட்டது. நிலநடுக்கம் காரணமாக அங்கு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் பலத்த சேதம் ஏற்பட்டிருப்பதாக மேண்டுலேவில் (Mandalay உள்ள மீட்புக் குழுவைச் சேர்ந்த ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தர். மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை தற்போது கூற முடியாது என்றும் எனினும் குறைந்தது 1000 பேர் பலியாகி இருக்கலாம் என்றும் பிபிசியிடம் அவர் தெரிவித்தார்.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு