• Sat. Jul 4th, 2026

24×7 Live News

Apdin News

உலகக்கோப்பை கால்பந்து: ஆஸ்திரேலியாவை வாஷ் அவுட் செய்த எகிப்து

Byadmin

Jul 4, 2026


பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு எகிப்து தகுதி பெற்றது.

ஆட்டம்

பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்று ஆட்டம் நேற்று அமெரிக்காவின் டல்லாஸ் மைதானத்தில் நடந்தது. இதில் ஆஸ்திரேலியா – எகிப்து அணிகள் எதிர்கொண்டன.

முதல் பாதி

ஆட்டம் தொடங்கி 13வது நிமிடத்தில் எகிப்து அணியின் எமாம் ஆஷவுர் ஒரு கோல் அடித்தார். இதன் பின் முதல் பாதியில் வேறு யாரும் கோல் அடிக்காததால் 1-0 என எகிப்து முன்னிலையில் இருந்தது.

இரண்டாம் பாதி

போட்டியின் 2வது பாதியில் எகிப்து அணியின் முகமது ஹானி சேம் சைடு கோல் போட்டார். இதனால், ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு கோல் கிடைத்தது. போட்டி 1-1 என்ற நிலைக்கு வந்தது. இதன்பின் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

கூடுதல் நேரம்

இதனை தொடர்ந்து கூடுதலாக அரை மணிநேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கூடுதல் நேரத்திலும் கோல் அடிக்கப்படவில்லை.

பெனால்டி ஷூட்அவுட்

எனவே ஆட்டம் பெனால்டி ஷூட்அவுட் முறைக்கு சென்றது. இதில் 2-4 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு எகிப்து தகுதி பெற்றது. ஆஸ்திரேலியா தொடரில் இருந்து வெளியேறியது.

By admin