0
உலகிலேயே முதல் முறையாக டெங்கு நோய்க்கான தடுப்பூசி பிரேஸிலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்புதலை பிரேஸில் அரசாங்கம் புதன்கிழமை அளித்துள்ளது.
சாவ் பாலோவில் உள்ள புகழ்பெற்ற புட்டான்டன் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ‘புட்டான்டன்-டிவி’ எனப்படும் இந்த டெங்கு நோய்க்கான தடுப்பூசி, 12 முதல் 59 வயதுடையவர்களுக்கு செலுத்தப்பட தகுதிவாய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கிடைக்கக்கூடிய டெங்கு தடுப்பூசிக்கு மூன்று மாத இடைவெளியில் இரண்டு டோஸ்கள் தேவைப்பட்ட நிலையில், இந்த புதிய தடுப்பூசி ஒரு டோஸ் போதுமானது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரேஸிலில் 16,000 தன்னார்வலர்களிடம் 8 ஆண்டுகள் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் கடுமையான டெங்குவுக்கு எதிராக இந்த தடுப்பூசி 91.6 சதவீதம் பயனுள்ளதாக உள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டில் உலகளவில் 14.6 மில்லியன் பாதிப்புகளும் 12,000 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் பாதி பிரேஸிலில் நிகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.