• Sat. Nov 22nd, 2025

24×7 Live News

Apdin News

உலகில் வறுமையை ஒழிக்க, செல்வந்தர்களின் ஓராண்டு வருமானம் போதும்!

Byadmin

Nov 22, 2025


உலகில் பெரிய பொருளியல் கொண்ட நாடுகளைச் சேர்ந்த செல்வந்தர்கள் கடந்த 2024ஆம் ஆண்டு 2.2 டிரில்லியன் டொலர் சம்பாதித்தாக Oxfam அற நிறுவனம் தெரிவித்தது.

உலகில் உள்ள ஏழைகள் அனைவரையும் வறுமையிலிருந்து மீட்டெடுக்க அந்தப் பணம் போதுமானது என்றும் அது கூறியது.

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் G20 மாநாட்டில் Oxfam அதனைத் தெரிவித்தது.

உலகில் உள்ள பெரிய அளவிலான சொத்து ஏற்றத்தாழ்வு, வளரும் நாடுகளின் கடன் பிரச்சினை ஆகியவற்றைக் கையாள, தென்னாப்பிரிக்காவின் முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்குமாறு G20 நாடுகளை அது கேட்டுக்கொண்டது.

கடந்த ஆண்டு G20 நாடுகளைச் சேர்ந்த செல்வந்தர்களின் சொத்து மதிப்பு 15.6 டிரில்லியன் டொலருக்கு உயர்ந்தது.

வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் 3.8 பில்லியன் பேரை ஏழ்மையிலிருந்து மீட்க 1.65 டிரில்லியன் டொலர் மட்டுமே தேவை என்று Oxfam சுட்டிக்காட்டியது.

வறுமையை முடிவுக்குக் கொண்டுவரவும் பருவநிலை மாற்றத்தைக் கையாளவும் செல்வந்தர்களுக்கு நியாயமான வரி விதிக்கப்பட வேண்டும் என்று அது குறிப்பிட்டது.

The post உலகில் வறுமையை ஒழிக்க, செல்வந்தர்களின் ஓராண்டு வருமானம் போதும்! appeared first on Vanakkam London.

By admin