1
உலகளாவிய சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்றைய தினம் (28) சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,250 அமெரிக்க டொலரை கடந்துள்ளது.
இதேபோன்று வெள்ளி மற்றும் பிளாட்டினம் விலைகளும் புதிய உச்சத்தை எட்டியுள்ளன.
சர்வதேச சந்தைகளில் ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வின் தாக்கம் இலங்கையின் உள்ளூர் சந்தையிலும் பிரதிபலித்துள்ளது. இதன்அடிப்படையில், புறக்கோட்டை தங்கச் சந்தையில் ஒரு பவுண் தங்கத்தின் விலை ஒரே நாளில் 10,000 ரூபாயால் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
22 காரட் தங்கத்தின் விலை 379,600 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 24 காரட் தங்கத்தின் விலை 405,000 ரூபாவை எட்டியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.