0
இலண்டன் நெடுந்தூர மாரத்தான் ஓட்டப் பந்தய நிகழ்வு, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 27ஆம் திகதியன்று நடைபெறவுள்ளது.
இந்த மாரத்தானில் 56,000க்கும் அதிகமானோர் பங்கேற்கவுள்ளனர் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதனால் மிக அதிக எண்ணிக்கையிலானோர் பங்கேற்ற நெடுந்தூர ஓட்டப் பந்தயமாக இலண்டன் மாரத்தான் உலக சாதனை படைக்கவிருக்கின்றது.
தற்போதைய உலக சாதனையின்படி, நியூயோர்க் நகரின் நெடுந்தொலைவு ஓட்டத்தில் 55,646 பேர் பங்கேற்றமை உள்ளது. இந்த ஓட்டப் பந்தயம்,
கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றிருந்தது. தற்போது, லண்டன் மாரத்தான் நிகழ்வினார் அந்த உலக சாதனை முறியடிக்கப்படவுள்ளது.
இலண்டன் நெடுந்தூர மாரத்தான் ஓட்டப் பந்தய நிகழ்வில் கலந்துகொள்ளவதற்காக முன் எப்போதும் இல்லாத அளவில் 840,318 பேர் விண்ணப்பித்திருந்தனர் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக, பெண்களிடமிருந்து அதிகளவில் விண்ணப்பங்கள் கிடைத்ததாக இலண்டன் நெடுந்தொலைவு ஓட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.