• Wed. Oct 9th, 2024

24×7 Live News

Apdin News

உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நடிகர் அஜித்குமாரின் துவிசக்கர வாகன சாகச சுற்றுலா பயணம்

Byadmin

Oct 9, 2024


தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான அஜித்குமார் , நடிப்பதுடன் , துவி சக்கர வாகன சாகச பயணம் தொடர்பான சுற்றுலா நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

இந்நிறுவனம் அண்மையில் அந்தமான் தீவில் உள்ள ரம்பிள் எனும் இடத்தில் ஹார்லி , டேவிட்சன் எனும் பிரபலமான துவி சக்கர வாகன சாகச சுற்றுலாவை மேற்கொண்டது. இந்த பயணம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறது.

நடிகர் அஜித்குமாருக்கு சொந்தமான தனியார் வாகன சாகச சுற்றுலா நிறுவனம்-  அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் துவி சக்கர வாகன சாகச சுற்றுலா ஒன்றை ஒருங்கிணைத்தது.

இந்த பயணத்தின் போது பயணிகள் துவிசக்கர வாகனத்தில் பயணித்து இயற்கை காட்சிகள் மற்றும் இதுவரை கண்டிராத சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்தனர்.

அவர்களின் இந்தப் பயணம் சாகசமாக இருந்ததுடன் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித்குமார் தொடங்கி இருக்கும் துவி சக்கர வாகன சாகச சுற்றுலா நிறுவனத்தின் பயணங்களும், திட்டங்களும் சர்வதேச அளவில் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது.

மேலும் இந்நிறுவனம் சுற்றுலா பயணிகளுக்கு சாகசத்துடன் கூடிய புதிய பயண அனுபவங்களையும் வழங்கி வருகிறது.

By admin