• Wed. Apr 30th, 2025

24×7 Live News

Apdin News

உலக நடன தினத்தை முன்னிட்டு ராமேசுவரம் அருகே கடலுக்கு அடியில் நடனம் | Dancing under the sea near Rameswaram

Byadmin

Apr 30, 2025


உலக நடன தினத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் கடலுக்கு அடியில் கடல் மாசுபாடு, கடல்வாழ் உயிரினப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தம் வகையில் சிறுவர், சிறுமி நடனமாடினர்.

ஆண்டுதோறும் ஏப். 29-ம் தேதி உலக நடன தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு சென்னை ஓஎம்ஆர் காரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்த்தின் மகள் தாரகை ஆராதனா(11), மாணவர் அஸ்வின் பாலா (14) ஆகியோர் நீருக்கடியில் நடனம் ஆடினர்.

இதுகுறித்து தாரகை ஆராதனா, அஸ்வின் பாலா ஆகியோர் கூறும்போது, “கடல் மாசுபாடு, கடல்வாழ் உயிரினப் பாதுகாப்பு, நடனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நடன நடவடிக்கைகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கவும், ராமேசுவரத்தில் உள்ள பாக். நீரிணை பகுதியில் கடலுக்கு அடியில் 20 அடி ஆழத்தில் விழிப்புணர்வு நடனமாடினோம்” என்றனர்.



By admin