கடந்த 24 மணித்தியாலத்திற்குள் தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய குற்றங்கள் தொடர்பில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் 08 வேட்பாளர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கடந்த 24 மணித்தியாலத்திற்குள் (நேற்று ஞாயிற்றுகிழமை (04) காலை 06.00 மணி முதல் இன்று திங்கட்கிழமை (05) காலை 06.00 மணி வரை) 5 சந்தேக நபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய குற்றங்கள் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 03 ஆம் திகதி முதல் மே மாதம் 05 ஆம் திகதி) 54 வேட்பாளர்களும் 204 சந்தேக நபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் நடவடிக்கைகளுக்காக சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்ட 46 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
The post உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் மேலும் 08 வேட்பாளர்கள் கைது appeared first on Vanakkam London.